Sunday, January 5, 2020

மாதவிடாய் காலத்தில் இரத்தத்தின் நிறத்தில் இந்த மாற்றம் ஏற்படுகிறதா? அது ஏன் தெரியுமா?

  Editor       Sunday, January 5, 2020
பெண்கள் மாதவிடாய் சுழற்சியின் போது பல பிரச்சினைகளை சந்திப்பார்கள். இக்காலத்தில் உடலானது கருப்பை சுவருடன் இரத்தத்தையும் வெளியேற்றும். பெரும்பாலும் ஒவ்வொரு சுழற்சியின் போதும் 4-12 டீஸ்பூன் அளவு இரத்தம் வெளியேறும்.



ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் சுழற்சி சராசரியாக 28 நாட்களாக இருக்கும். இன்னும் சில பெண்களுக்கு 21 நாட்களாகவும், வேறு சில பெண்களுக்கு 35 நாட்களாகவும் இருக்கும்.

சாதாரணமாக மாதவிடாய் காலமானது 2-7 நாட்கள் வரை இருக்கும். சராசரியாக 5 நாட்கள் வரை இருக்கும்.

கருப்பை பலவீனமாகவோ அல்லது கருப்பை சுவர் மெல்லியதாகவோ இருந்தால், இரத்தத்தை முறையாக வெளியேற்ற முடியாமல், தாமதமாக வெளிவரும் போது, அந்த இரத்தம் அடர் அல்லது கருப்பு நிறத்தில் கெட்டியாக வெளிவரும்.

இதற்காக மருத்துவரிடம் எல்லாம் செல்ல வேண்டும் என்பதில்லை. கருப்பையின் வலிமையை அதிகரிக்கும் சில கை வைத்தியங்களைக் கொண்டே, இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.

தமிழர்களின் பாட்டி வைத்தியம்

  • ஒரு கப் மாட்டுப் பாலில் 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி சாறு, 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, குடித்து வர கருப்பு நிறத்தில் இரத்தம் வெளிவருவது தடுக்கப்படும்.
  • சோம்பு நீரை தினமும் 3 வேளை குடித்து வர வேண்டும். இதனால் கருப்பையின் சுவர் வலிமையடைந்து, மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
  • இஞ்சி டீயை மாதவிடாய் காலத்தில் குடித்து வந்தால், வயிற்று வலி மற்றும் இதர மாதவிடாய் கால பிரச்சனைகள் நீங்கும்.
  • இஞ்சி சாற்றில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்தால், உடலில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு, மாதவிடாய் கால பிரச்சனைகள் அகலும்.
  • கருஞ்சீரகத்தை கருப்பட்டி சேர்த்து அரைத்து, மாதவிடாய் காலத்தில் சாப்பிட்டு வந்தால், கருப்பு நிறத்தில் இரத்தம் வெளியேறுவதைத் தடுக்கலாம்.
  • அதுவும் 3 மாதம் இப்படி உட்கொண்டு வந்தால், கருப்பையின் வலிமை அதிகரித்து, மாதவிடாய் பிரச்சனைகள் நீங்கும்.
logoblog

#hashtag

Thanks for reading மாதவிடாய் காலத்தில் இரத்தத்தின் நிறத்தில் இந்த மாற்றம் ஏற்படுகிறதா? அது ஏன் தெரியுமா?

No comments:
Previous
« Prev Post