Tuesday, November 19, 2019

மனைவியிடம் கணவன் சொல்ல தயங்கும் விடயங்கள்.. பெண்களே கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்..!

  Yarldeepam       Tuesday, November 19, 2019
பொதுவாக ஆண்கள் பல விடயங்களை பெண்களிடம் வெளிப்படையாக கூறுவதில்லை. அடிப்படையிலேயே ஆண்களுக்கு செயல்திறன் அதிகமாகவும், மொழித்திறன் குறைவாகவும் இருக்கிறது.



அதனால்தான் வெளிப்படையாக ஆண்கள் தங்களுடைய உணர்வுகளை வெளிக்காண்பித்துக் கொள்வதில்லை. குறிப்பாக, பெண்களிடம் ஆண்கள் வெளிப்படையாகப் பேசுவதே இல்லை.

வருடக்கணக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் மனைவியிடம் கூட தன் மனதில் இருக்கும் எதிர்பார்ப்புகளையும், ஆசைகளையும் பெரும்பாலான ஆண்கள் வெளிப்படுத்துவதில்லை என்கிறார்கள் உளவியலாளர்கள்.

அப்படி என்னென்ன விஷயங்களை ஓர் ஆண் தன்னுடைய வாழ்க்கைத்துணையிடம் சொல்ல விரும்புகிறான் அல்லது சொல்லாமலேயே மறைக்கிறான் என்பது பற்றி பார்ப்போம்...

பெண்களின் பக்க பலம் முக்கியம்
மற்ற உறவுகளைவிட ஆண்பெண் இடையேயான உறவு நிலை பல வகையிலும், ஒருவருக்கு ஒருவர் சிறந்த ஆதரவாகத் திகழ்கிறது. உங்களுடைய ஆண் துணை உங்களுக்கு உதவிகரமாகவும், பக்கபலமாகவும் இருக்கும்பட்சத்தில் நீங்கள் அந்த உறவினுடைய உன்னதத்தை முறையாக அங்கீகாரம் செய்ய வேண்டுமென ஆண் மனம் விரும்புகிறது.

புரிந்துகொள்ளுங்கள்
பல நேரங்களில் வாழ்க்கை சுமை கடினமாகிறது. ஆணுக்கு எதிர்பார்த்த பலன் தராத போது மனதளவில் உடைந்து போகிறான். அப்போது எந்தக் காரணத்துக்காகவும் அவனை விமர்சனம் செய்வதோ அல்லது செய்த தவறுகளை விலாவரியாக விளக்கிச் சுட்டிக்காட்டவோ செய்யாதீர்கள். அதற்கு மாறாக, நீங்களும் அவனைப் போன்று அவனுடைய இடத்தில் இருந்து யோசியுங்கள்.

தனிமை அவசியம்
நாம் எல்லோரும் ஏதாவது ஒரு தருணத்தில், தனிமையை ரசிக்கத்தான் செய்கிறோம். அதற்காக, வாழ்க்கைத்துணைக்கு தனிமை சூழலை அனுபவிப்பதற்காக, சில மணி நேரங்கள் தேவைப்படுகிறது என அர்த்தம் கற்பித்து கொள்ளக்கூடாது.

ஒருவருடைய தனிப்பட்ட எண்ண ஓட்டங்கள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதைத் தரம் பிரித்து அறிந்துகொள்ள, சில மணி நேரங்கள் கண்டிப்பாக எல்லோருக்கும் இருக்கும். உங்கள் கணவருக்கு எப்போதெல்லாம் தனிமை தேவைப்படுகிறதோ, அந்த நேரங்களில் அவருக்கான நேரத்தை, உலகத்தை எடுத்துக்கொள்ள தடை செய்யாதீர்கள்.

சமையலோ, வீடு சுத்தம் செய்வதோ, குழந்தை பராமரிப்போ எதுவாக இருந்தாலும் வீட்டு வேலைகளில் உங்களுக்கு கணவர் உதவி செய்யும்போது அதனை அங்கீகரிக்க வேண்டுமெனவும் அவன் விரும்புகிறான்.

தோற்றத்தை பாராட்டுங்கள்
தன்னுடைய புறத்தோற்றத்தில் அக்கறை இல்லாதவனாக, உங்களுடைய கணவன் நடந்துகொள்ளும்போது, நீங்கள் அவனை இன்னும் அதிகமாக ஈர்க்க வேண்டும் என்பது தேவையாக உள்ளது.

அது மட்டுமில்லாமல், உங்களுடைய கணவர் கவர்ச்சிகரமான தோற்றம் கொண்டவராகவும், ஆண்மைத்தன்மை உடையவராகவும் உள்ளார் என்பதைத் தெரியப்படுத்துங்கள். அவ்வாறு செய்வதால், தோற்றத்தை மேம்படுத்துவதிலும், தாம்பத்ய உறவிலும் அதிகளவிலான முயற்சிகளை மேற்கொள்ள அவரை ஊக்குவிக்கும்.

நண்பர்களிடம் பேச நேரத்தை கொடுங்கள்
கணவருடைய வாழ்க்கையில், நீங்கள் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவனுகென்று தனிப்பட்ட நேரத்தை நண்பர்களுடன் செலவிட நினைக்கும்போது அதற்கான அனுமதியை வழங்குங்கள்.

தன்னுடைய குடும்ப ரீதியான, பொருளாதாரரீதியான, தொழில்ரீதியான அழுத்தங்களிலிருந்து வெளிவர அவனுக்கென்று நெருக்கமான நண்பர்கள் வட்டாரம் தேவை. அவருடைய மிகவும் நெருங்கிய நண்பர்களிடம், நீங்கள் அளவுகடந்த உரிமை எடுத்துக்கொள்ள முடியாது.

பாராட்டுங்கள்
எந்தவொரு சிறு செயலாக இருந்தாலும், மனைவியாய் நன்றி சொல்ல தயங்காதீர்கள். ஏனெனில், வாழ்க்கைத் துணை என்ற இடத்தில் இருந்து, உங்களுடைய கணவர் மேற்கொள்கிற முயற்சிகளை, ஏற்றுக்கொண்டு பாராட்டு தெரிவியுங்கள். அவ்வாறு நீங்கள் தெரிவிக்கும் பாராட்டுக்கள் இரட்டிப்பாக உங்களுக்குத் திரும்ப கிடைக்கும்.

ஓர் ஆண் பெண்ணிடம் எதிர்பார்க்கும் வார்த்தைகளில், ‘உன் மீது நம்பிக்கை வைத்துள்ளேன்’ என்பவை மிகவும் சக்தி வாய்ந்தவை. இவ்வாறு, பெண் கூறுவதன்மூலம் ஆணானவன், வாழ்க்கை மற்றும் வேலைக்குத் தேவையான காரணிகளில் சரியானவற்றை உருவாக்கித் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்.

இது தவிர, தன் கனவுகளை, ஆசைகளை மெய்படச் செய்யும் திறமையையும் தன்னிடம் கொண்டுள்ளான். ஆண்களைப் பொறுத்தவரை, பெண்ணின் இந்த எண்ணமானது, உண்மையானதும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
logoblog

#hashtag

Thanks for reading மனைவியிடம் கணவன் சொல்ல தயங்கும் விடயங்கள்.. பெண்களே கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்..!

No comments:
Previous
« Prev Post