Monday, November 4, 2019

பெண்களே தினமும் 2 வாழைப்பழம் சாப்பிடுங்கள்! பல பிரச்சினைகளுக்கு இது ஒன்று தான் தீர்வு?

  Yarldeepam       Monday, November 4, 2019
நாம் தொடர்ந்து ஒரு சில உணவுபொருட்களை சாப்பிட்டு வந்தால் நிச்சயம் அதனால் ஏற்பட கூடிய பலன் பல மடங்கு அதிகமாக இருக்கும்.

பொதுவாகவே பாதாம், அத்திப்பழம், முட்டை போன்றவற்றை தினமும் சாப்பிடுவது ஏராளமான பயன்களை தர வல்லது.

இந்த வகையில் வாழை பழமும் சேர்க்கிறது. தினமும் சாப்பிட்டால் என்ன நன்மை கிடைக்கின்றது என்று அறிந்து கொள்ளுங்கள்.

வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் எ, வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், ஃபோலேட், மெக்னீசியம் போன்றவை அதிக அளவில் நிறைந்துள்ளதாம்.




  • தினமும் 2 வாழைப்பழம் சாப்பிடுவதால் ரத்தத்தின் அளவு அதிகரித்து ரத்த சோகையை குணப்படுத்தலாம்.
  • வாழைப்பழத்தில் அதிக அளவில் நார்சத்து உள்ளது. எனவே, இவற்றை தொடர்ந்து சாப்பிடுவதால் உங்களின் உடல் எடை மிக சீக்கிரத்திலே குறைய பல வாய்ப்புகள் உள்ளதாம்.
  • இவற்றில் உள்ள ஸ்டார்ச், அடிக்கடி பசி எடுப்பதை தவிர்க்கிறது. அத்துடன் உங்களின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் இது குறைகிறதாம்.
  • இன்று எதை சாப்பிட்டாலும் நெஞ்சிலே இருப்பது போன்றும், ஜீரணம் ஆகாதது போன்றும் இருப்பது அதிகமாகி விட்டது.
  • இதனை சரி செய்ய வெறும் 2 வாழைப்பழம் போதும். உங்களின் குடல் சார்ந்த பலவித பிரச்சினைகளுக்கு வாழைப்பழம் சிறந்த தீர்வை தருகிறது.
  • மேலும், மலச்சிக்கலை எளிதில் குணப்படுத்த தினமும் 2 வாழைப்பழமே போதும்.
  • பெண்களுக்கு ஏற்படுகின்ற மாதவிடாய் கால பிரச்சினைகளில் இருந்து வாழைப்பழம் காக்கிறதாம்.
  • மாதவிடாய் வலியோ, பயமோ, அதனால் ஏற்படும் மன அழுத்தத்தையும் இவை முழுவதுமாக சரி செய்து விடுமாம். இதற்கு முழு காரணம் வாழைப்பழத்தில் உள்ள இருப்புசத்து தான்.
logoblog

#hashtag

Thanks for reading பெண்களே தினமும் 2 வாழைப்பழம் சாப்பிடுங்கள்! பல பிரச்சினைகளுக்கு இது ஒன்று தான் தீர்வு?

No comments:
Previous
« Prev Post