Tuesday, October 22, 2019

வாரம் இரு முறை வாழைப்பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க.. கூந்தல் உங்கள் சொல் பேச்சை கேட்குமாம்!

  Yarldeepam       Tuesday, October 22, 2019
தலைமுடி உதிர்வதற்கு முக்கியமானவை காற்று மாசுபாடு, தலை முடி வேர்களின் வறட்சி, அழுக்கு மற்றும் தூசிகள்தான் ஆகும்.

இதற்காக பலரும் கெமிக்கல் கலந்த கண்டிஷ்னர் வாங்கி உபயோகிப்பதுண்டு.

கெமிக்கல் நிறைந்த கண்டிஷ்னர்களை வாங்கி பயன்படுத்துவதை தவிரித்து விட்டு வீட்டில் இருக்கம் பொருட்களை கொண்டு எளிய முறையில் கண்டிஷ்னரை தயாரிக்க முடியும்.



அதற்கு வாழைப்பழம் பெரிதும் உதவி புரிகின்றது.

ஏனெனில் வாழைப்பழத்தில் கண்டிஷ்னர் செய்வதால் அதில் கிடைக்கக் கூடிய வைட்டமின்கள், மினரல்கள், ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் பொட்டாசியம் போன்றவை அடங்கியுள்ளதால் தலைமுடியை உறுதியாக்க உதவுகின்றன.

அந்தவகையில் தற்போது வாழைப்பழத்தை வைத்து எப்படி ஆரோக்கியமான முறையில் கண்டிஷ்னரை தயாரிக்கலாம் என பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • வாழைப்பழம் - 3
  • தேன் - 2 ஸ்பூன்
  • தேங்காய் பால் - 2 ஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்
  • ஆலிவ் ஆயில் - 2 ஸ்பூன்
  • ரோஸ் வாட்டர் - 1 ஸ்பூன்
  • தயிர் - 2 ஸ்பூன்

செய்முறை
முதலில் வாழைப்பழத்தை நன்கு மைய மசித்துக் கொள்ளுங்கள்.

பின் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கினால் கெட்டியான பதத்தில் வரும். அதுவே வாழைப்பழக் கண்டிஷ்னர் ஆகும்.

தலையை ஷாம்பூ கொண்டு குளித்தபின், தாயரித்து வைத்துள்ள கண்டிஷ்னரை அப்ளை செய்து 10 நிமிடங்கள் ஊற வைத்த பின்னர் நன்கு தேய்த்து தலையை அலசுங்கள்.

இவ்வாறு வாரம் இரு முறை செய்து வந்தால் கூந்தலுக்கு நல்ல பயனை தரும்.
logoblog

#hashtag

Thanks for reading வாரம் இரு முறை வாழைப்பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க.. கூந்தல் உங்கள் சொல் பேச்சை கேட்குமாம்!

No comments:
Previous
« Prev Post