Saturday, March 30, 2019

இலங்கை சிங்களவர் சுவைக்கும் லவேரியா செய்வது எப்படி?

  Yarldeepam       Saturday, March 30, 2019
இலங்கை சிங்களவர் உணவுப்பட்டியலில் லவேரியாக்கு என்றே தனியிடம் உள்ளது. இது இடியாப்பத்தில் செய்யப்படும் இனிப்புவகைகளுள் ஒன்றாகும்.

இதனை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவாகும்.



தற்போது சுவையான இந்த லவேரியாவை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.

தேவையானவை

பாசிப்பருப்பு - கால் கப்
ஏலக்காய் பொடி - கால் தேக்கரண்டி
தேங்காய் துருவல் - கால் கப்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
சர்க்கரை - கால் கப்
இடியாப்ப மாவு - ஒரு கப்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை
முதலில் பாசிப்பருப்பை சிவக்க வறுத்து முக்கால் பதத்திற்கு வேக வைக்கவேண்டும் .

இப்பொழுது வேக வைத்த பாசிப்பருப்பில் தேங்காய் துருவல், சீனி, ஏலக்காய் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து சுருள கிளறவும்.

பின் இடியாப்ப மாவில் உப்பு சேர்த்து தண்ணீரை கொதிக்கவைத்து சிறிது சிறிதாக விட்டு கெட்டியாக பிசையவும்.



பின்னர் வாழை இலையில் எண்ணெய் தடவி பிசைந்த மாவில் இடியாப்பம் பிழிந்து நடுவில் பாசிப்பருப்பு கலவையை வைக்கவும்.

பின் இட்லி பானையில் தண்ணீர் வைத்து இலையை பாதியாக மடித்து மூடி வேக வைக்கவும். சுவையான லவேரியா தயார். இதனை காலை, மாலை நேரங்களில் கூட செய்து சாப்பிடலாம்.
logoblog

#hashtag

Thanks for reading இலங்கை சிங்களவர் சுவைக்கும் லவேரியா செய்வது எப்படி?

No comments:
Newest
You are reading the newest post