Wednesday, February 27, 2019

முகப்பரு, தழும்புகள் போக்கும் அற்புதமான ஃபேஸ் மாஸ்க்... இப்படி யூஸ் பண்ணுங்க

  Yarldeepam       Wednesday, February 27, 2019
இன்றைய பெண்கள் தங்களை அழகாக காட்ட வேண்டும் நினைத்து உடனே க்ரீம்கள் அல்லது லோசன்களைக் கொண்டு சரிசெய்ய முயல்வார்கள்.

உண்மையில் இது உடல் ரீதியான பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தி மரணம் வரை கொண்டு சென்றுவிடும்.

அந்தவகையில் இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்ய முயற்சித்தால், அதனால் பக்கவிளைவுகள் ஏதும் நேராது, மாறாக சருமத்தின் ஆரோக்கியமும் பொலிவும் இயற்கையாகவே ஏற்படுத்தும்.

தற்போது சரும சுருக்கம், தழும்புகள், முகப்பரு, சரும கருமை போன்றவற்றைப் போக்க ஓர் அற்புதமான ஃபேஸ் மாஸ்க் உள்ளது. அவை என்ன என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
தேன் - 1 டீஸ்பூன்
பட்டைத் தூள் - 1/2 டீஸ்பூன்
ஜாதிக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

செய்முறை



மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து, பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும்.

பின் முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை முகத்தில் தடவும் போது கண்களின் மேல் தடவுவதைத் தவிர்க்கவும்.

ஒருவேளை உங்களுக்கு சென்சிடிவ் சருமம் என்றால், எலுமிச்சை சாற்றினை சேர்க்காமல் இருக்கலாம் அல்லது தேனை சற்று அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் எலுமிச்சை சாறு சருமத்தில் அரிப்பு மற்றும் எரிச்சலை உண்டாக்கும்.

இந்த மாஸ்க்கை முகத்தில் தடவிய பின் சிறிது எரிச்சலை உண்டாக்குவது போல் இருக்கும்.

ஆனால் சிறிது நேரத்தில் அது போய்விடும். மேலும் வாரத்திற்கு ஒருமுறை இந்த மாஸ்க்கைப் போட்டு வந்தால், சரும பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம்.

முக்கிய குறிப்பு
இரத்த நாளம் சம்பந்தமான பிரச்சனைகளைக் கொண்டவர்கள், இந்த மாஸ்க்கைப் போட வேண்டாம்.

ஏனெனில் தேன் இரத்த நாளங்களை விரிவடையச் செய்யும். வேண்டுமானால், இந்த மாஸ்க்கில் தேனிற்கு பதிலாக வெள்ளை அல்லது க்ரீன் க்ளே பயன்படுத்திக் கொள்ளலாம்.

logoblog

#hashtag

Thanks for reading முகப்பரு, தழும்புகள் போக்கும் அற்புதமான ஃபேஸ் மாஸ்க்... இப்படி யூஸ் பண்ணுங்க

No comments:
Previous
« Prev Post