Wednesday, October 31, 2018

பற்கள் விழுந்தது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

  yarl deepam       Wednesday, October 31, 2018


கனவுகளுக்கு ஒவ்வொரு அர்த்தங்கள் உள்ளன என்ற நிலையில், பற்கள் விழுவது போல் கனவு வந்தால் அதற்கு என்ன அர்த்தம் என்பது குறித்து இங்கு காண்போம்.

உங்களை அறியாமல் உங்கள் பற்கள் விழுவதை போல் கனவு வந்தால், அதற்கு காரணம் உங்களின் வாழ்க்கையில் தோல்வி, வேலை இழப்பு, குடும்ப அழுத்தம் போன்ற சூழ்நிலைகளால் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதாகும். இதனால் உங்கள் சூழ்நிலைகளின் கட்டுப்பாட்டை இழந்தது போன்ற ஓர் உணர்வு ஏற்படும்.

இழப்பதை போன்ற மனம்
பணம் அல்லது குழந்தையை இழப்பது போன்ற உணர்வு இருந்தால், அப்போது உங்களுக்கு பற்கள் விழுவது போன்ற கனவு எழும். மனதில் எழும் பயமே இதுபோன்ற கனவிற்கு காரணமாகும்.

வயதான தோற்றம்
வயதாகுவதை நினைத்து நீங்கள் மன அழுத்தம் கொண்டிருந்தால், உடல்நலம் மற்றும் சூழ்நிலைகளில் சரிவு ஏற்படும்போது இதுபோன்ற கனவு ஏற்படும். இதனால் உங்கள் சுய உணர்வை இழப்பீர்கள்.

குடும்ப உறுப்பினரின் உடல்நலம்
குடும்பத்தில் உள்ள நபர்களின் உடல் நலம் பற்றிய கவலையை நீங்கள் கொண்டிருந்தால், உங்களுக்கு பற்கள் விழுவது போல் கனவு வரும்.

பணப் பிரச்சனை
உங்களுக்கு பணப் பிரச்சனைகள் இருக்கும்போது, சேமிப்பு இல்லாமல் பணத் தட்டுப்பாடு இருக்கும்போது பற்கள் விழுவது போன்ற கனவு எழும்.

மன அழுத்தம்
நாம் ஆழ்ந்த உறக்கத்தில் சுய நினைவை இழந்து இருக்கும் போது, நம்முடைய ஆழ்மனதில் உள்ள எண்ணங்கள் பற்கள் விழுவது போன்ற கனவை ஏற்படுத்தும் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
logoblog

#hashtag

Thanks for reading பற்கள் விழுந்தது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

No comments:
Previous
« Prev Post