Thursday, June 7, 2018

கடந்த சில வருடங்களுக்கு முன்பு, விபச்சார வழக்கில் சிக்கியவர் நடிகை ஸ்வேதா பாசு. இவர் இந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் தெலுங்கு, தமிழ், உள்ளிட்ட மொழி படங்களில் நடித்தார். ஒரு நிலையில், இவருக்கு பட வாய்புகள் குறைந்ததால் குடும்ப கஷ்டத்திற்காக விபச்சார தொழிலை நடத்திவந்தார். இந்நிலையில் இவரை ஒரு முறை காவல் துறையினர் ஐந்து நட்சத்திர விடுதியில் விபச்சாரம் செய்த குற்றத்திற்காக கைது செய்தனர். பின் அவரை 15 நாட்கள் விடுதியில் அடைத்து வைத்து பின் விடுதலை செய்யப்பட்டார். இவரின் நிலையை அறிந்து இவருக்கு சில திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. மேலும் ஸ்வேதா பாசு பிரபல இந்தி இயக்குனர் ரோஹித் மிட்டலை காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். சமீபத்தில் தான் இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நண்பராக இருந்த ரோஹித்திடம் ஸ்வேதா பாசு தான் முதல்முறையாக ப்ரொபோஸ் செய்துள்ளார். அதை அவரும் சில நாட்களை கழித்து ஏற்றுக்கொண்டாராம். குடும்பத்தினரும் ஒப்புக்கொண்டதால் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து நிச்சயம் செய்துகொண்டோம் என்று தெரிவித்தார்.

  Editor       Thursday, June 7, 2018


ஒளிப்பதிவாளர் பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கத்தில் மலையாள நடிகர் டொவினோ தாமஸ், பியா பாஜ்பாய், ரோகிணி, சுஹாசினி, பிரபு, மனோபாலா ஆகியோர் நடித்திருக்கும் காதல் திரைப்படம். இப்படத்திற்கு மதன் கார்க்கி பாடல் ஆசிரியராகவும், தரன் குமார் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

இந்த படத்தில் ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில், பொறியாளராக வேலை பார்க்கும் இளைஞன் அபி. அம்மா, அப்பா வேலை நிமித்தமாக பல ஊர்களுக்கும் சுற்றித் திரிவதால், சிறு வயதில் இருந்தே ஹாஸ்டல் வாழ்க்கை வாழ்பவன்.மேட்டுப்பாளையத்தில் சுதந்திர பறவையாக வாழும் இளம்பெண் அனு(பியா பாஜ்பாய்). சமூக அக்கறையுடன் ஃபேஸ்புக் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். புற்றுநோயாளிக்களுக்காக மொட்டை அடித்து, அந்த வீடியோவையும் ஃபேக்ஸ்புக்கில் அப்லோட் செய்த அனுவின் மீது அபிக்கு அளவுகடந்த ஈர்ப்பு ஏற்படுகிறது.

இதனால் ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், வீடியோ காலிங் என இருவரும் நெருக்கமாகிறார்கள். முதல் சந்திப்பிலேயே திருமணமும் செய்துகொள்கிறார்கள். இதனை அபியின் பெற்றோர், வீடியோ காலிங் வழியே பார்த்து வாழ்த்தவும் செய்கிறார்கள். அந்த கொடுப்பனையும் அனுவின் தாய்க்கு (ரோகினி) கிடைக்கவில்லை.காதலர்கள் இருவரும் கணவன் மனைவியாகி, சென்னையில் சந்தோஷமாக வாழ்வை தொடர்கிறார்கள். அனு கற்பமானதும் தலைக்கால் புரியாமல் அதிக மகிழ்ச்சியின் உச்சத்தில் மிதக்கிறார்கள் கணவனும், மனைவியும்.

வாழ்வைப் பற்றி பல்வேறு திட்டங்களை இருவரும் வகுத்து வரும் சூழலில் அந்த உண்மை தெரியவருகிறது. அந்த உண்மை என்னவென்றால் திருமணம் செய்துகொண்டு வயிற்றில் கருவை சுமக்கும் அணுவும், அபியும் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள்.இருவரின் வாழ்வும் சூன்யமாகிறது. அந்த உண்மை தெரிந்த பிறகு அவர்களுடைய வாழ்க்கை எப்படி திசைமாறுகிறது என்பது தான் மீதிக்கதை.

இன்றைய சூழலில் வித்யாசமான கதையை இயக்கி மக்களை சற்று அதிரவைத்த அபியும் அணுவும் மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.
logoblog

#hashtag

Thanks for reading கடந்த சில வருடங்களுக்கு முன்பு, விபச்சார வழக்கில் சிக்கியவர் நடிகை ஸ்வேதா பாசு. இவர் இந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் தெலுங்கு, தமிழ், உள்ளிட்ட மொழி படங்களில் நடித்தார். ஒரு நிலையில், இவருக்கு பட வாய்புகள் குறைந்ததால் குடும்ப கஷ்டத்திற்காக விபச்சார தொழிலை நடத்திவந்தார். இந்நிலையில் இவரை ஒரு முறை காவல் துறையினர் ஐந்து நட்சத்திர விடுதியில் விபச்சாரம் செய்த குற்றத்திற்காக கைது செய்தனர். பின் அவரை 15 நாட்கள் விடுதியில் அடைத்து வைத்து பின் விடுதலை செய்யப்பட்டார். இவரின் நிலையை அறிந்து இவருக்கு சில திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. மேலும் ஸ்வேதா பாசு பிரபல இந்தி இயக்குனர் ரோஹித் மிட்டலை காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். சமீபத்தில் தான் இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நண்பராக இருந்த ரோஹித்திடம் ஸ்வேதா பாசு தான் முதல்முறையாக ப்ரொபோஸ் செய்துள்ளார். அதை அவரும் சில நாட்களை கழித்து ஏற்றுக்கொண்டாராம். குடும்பத்தினரும் ஒப்புக்கொண்டதால் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து நிச்சயம் செய்துகொண்டோம் என்று தெரிவித்தார்.

No comments:
Previous
« Prev Post